யமஹாவை நிர்வாணமாக்கி கிணற்றுக்குள் பதுக்கிய "பைக் டாக்டர்" சிக்கினார்..! என்ன ஒரு புத்திசாலித்தனம்

0 793

நாமக்கல் அருகே யமஹா மோட்டார்சைக்கிளை திருடிய பைக் மெக்கானிக் ஒருவர், அதனை தனி தனியாக பிரித்து கிணற்றுக்குள்ளும், சமையல் அறையிலும் மறைத்து வைத்த நிலையில் வசமாக சிக்கிக் கொண்டார்

பளபளப்பா இருந்த பைக்க... பார்ட் பார்ட்டாக பிரித்து கிணற்றுக்குள் பதுக்கிய பைக் டாக்டர் சுப்பிரமணி இவர் தான்..!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்துள்ள வாழவந்தி கோம்பை பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான யமஹா ஆர்எக்ஸ் 135 வகை இருச்சக்கர வாகனம் கடந்த 11-ம் தேதி களவுபோனது. இதுகுறித்து சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்த தமிழ்ச்செல்வன் நண்பர்களுடன் சேர்ந்தும் தனது பைக்கை தீவிரமாக தேடி வந்தார்.

வீட்டின் அருகில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்த போது இருச்சக்கர வாகனத்தை திருடியவர் அடையாளம் காணப்பட்டார். அது காரவள்ளியில் பைக் பட்டறை நடத்தி வந்த மெக்கானிக் சுப்பிரமணி என்பது தெரியவந்தது. சுப்பிரமணியை பிடித்து சிறப்பு கவனிப்புடன் விசாரணை செய்த போது இருச்சக்கர வாகனத்தை திருடியதை ஒப்புக்கொண்டார்.

வாகனம் எங்கே என சுப்பிரமணியிடம் கேட்டபோது, அதனை கிணற்றுக்குள் வைத்துள்ளதாக கூறியதை கேட்டு தமிழ்ச்செல்வன் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கிணற்றுக்குள் இருந்த எலும்புக்கூடாக காட்சி அளித்த யமகா பைக்கை மீட்டார்.

எஞ்சின் மற்றும் இதர உதிரிப் பாகங்களை தனது வீட்டின் சமையலறையில் பதவிசாக பதுக்கி வைத்திருந்தார் சுப்பிரமணி. அதனையும் மீட்ட தமிழ்ச்செல்வன் இருச்சக்கர வாகனத்தை திருடிய சுப்பிரமணிக்கு பளார் விட்டு போலீசாரிடம் ஒப்படைத்தார்.

திருடு போன பைக்கை, சிசிடிவி உதவியால் விரைவாக கண்டுபிடிக்க முடிந்ததாக தெரிவித்த போலீசார், கூடுமானவரை வீடுகளில் சிசிடிவி பொறுத்தும் போது வீதிகளில் செல்லும் வாகனங்களின் நம்பர் பிளேட்டும், நபர்களின் முகமும் தெளிவாக தெரியும் வகையிலான தரமான காமிராக்களை பொருந்தும்படி அறிவுறுத்தினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments